Skip to main content

ஊ(ரும்)ரடங்கு நாட்கள்!!

அகழாய்வு ஒன்றில் ஓலைச் சுவடி ஒன்று கிடைக்கிறது. விடயம் தெரிந்த பலரும் அதை முடக்க நினைக்கிறார்கள். தீயில் இடுகிறார்கள் எரியவில்லை. மண்ணில் புதைக்கிறார்கள் அழியவில்லை. பாவம் அவர்களுக்கு தெரியாது போலும் அது தமிழன் எழுதிய சுவடு என்று. தமிழன் எழுதிய சுவடுக்கே அத்தகைய பலம் என்றால். எம் மக்கள் எதையும் தாங்கும் பலம் பொருந்தியவர்கள். பல இன்னல்களை கடந்த அவர்களுக்கு இது ஒரு புது இன்னல். மக்கள் உயிர் குடிக்க அவதரித்த கொரோனா. அதை பரவாமல் தடுக்க ஊரடங்கு. இந்த ஊரடங்கை எனது பார்வையில்....


ஒரு மணி வரை இயங்கும் கடைகள். வலை தளம் வாயிலாக கற்று விதம் விதமாய் சமைக்கும் அன்னை. பணம் ஈட்ட வழி தேடும் தந்தை. எந்த நேரமும் கணினியோடு அலுவலக வேலை செய்யும் தமையன். கல்லூரிகள் மூடிய நிலையில் கைபேசியில் வகுப்புகளையும் தேர்வுகளையும் வைக்கும் பேராசிரியர்கள். ஆக அனைவரும் விடுமுறை விட்டும் விடாத நிலமையில் இருக்கிறோம். விடுப்புக்காக ஏங்கிய நாட்கள் போய் ஒரு பிடிப்பும் இன்றி வாழ்கின்றனர் எம் மக்கள். ஆனால் அன்பாய் தாயை அரவனைப்பதில் இன்பம் ஆக தான் உள்ளது . நூறாண்டு கால பகைவரைப் போல் தாயக்கட்டம் விளையாடி காய்களை குத்தி சகோதரனோடு நித்தம் சண்டை இடுவதும் மகிழ்ச்சியாக தான் உள்ளது. குடும்பத்தில் நால்வரும் ஒன்றாய்ப் பேசி சிறித்து முழு நேரமும் வீட்டிலேயே இருந்து பல மாதமாய் கடக்கிறோம். இந்த நாட்கள் தித்திப்பாக மனதில் பசுமை சேர்கிறது.


படங்களிலும் கதைகளிலும் கொடுமைக் காரர்களாய் தெரியும் காவல் துறையினர், இன்று மக்களை காக்கும் தெய்வங்களாய் உயிரை பணயம் வைத்து விட்டு செயலாற்றுகிறார்கள். வீதிகளில் நின்று போராடுகிறார்கள்.  எனக்கு கிடைத்த இந்த இனிப்பான நாட்கள் அவர்களுக்கு கிடைக்கவில்லையே என மனம் வருந்தி அவர்களை வணங்குகிறது, அவர்களுக்காகவும் வணங்குகிறது. காவல் துறையினர்க்கும் கொரோனா தொற்று உறுதி ஆவதை நினைத்தால் கொரோனா மீது கடும் கோபம் வருகிறது. அவர்கள் ஊரடங்கை ஊரடங்கின் மூலம் மீட்க நினைக்கிறார்கள். அவர்களது விழிப்புணர்வு முயற்சிகள் சிந்திக்க வைக்கிறது. அவர்களுக்கு என்றென்றும் நன்றிகள்.


 ஆனால் இந்த ஊரடங்கு ஏழை மக்களுக்கு கசாயம் போல் கசக்கிறது. உண்ண உணவு இன்றி பசியில் வாடுகிறார்கள். "வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் " என்ற வள்ளல் பிரான் வரிகளே ஞாபகம் வருகிறது. இவர்களில் பல குண வதிகள் சாலை வேளைகளில் ஈடுபாட்டோடு பணி புரிகின்றனர். இவர்கள் வீட்டை இழக்கும் நிலையிலும் வீட்டில் இருக்க கட்டாய படுத்த படுகிறார்கள். அவர்களுக்கு பசி தான் கொரோனா வை விட கொடியது . அவர்களுக்கு நம்பிக்கை தந்து காத்திட இறைவனிடம் வேண்டுகிறேன்.


நாம் நிச்சயம் பேச வேண்டியது  கொரோனாவோடு போர் புரியும் மருத்துவர்கள் நடமாடும் தெய்வங்கள். ஓய்வின்றி நமக்காக குடும்பத்தை பிரிந்து பணி ஆற்றுகிறார்கள். நமக்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்க கடுமையாய் உழைக்கிறார்கள். நிச்சயம் அவர்கள் அதில் வெற்றி பெற மனம் விரும்புகிறது. நமக்கு நாளும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை வழங்கி வருகின்றனர். மக்கள் அறியாமையில் கவனிக்க மறுக்கின்றனர். ஆனவத்தில் இல்லை. அறியாமைக்கு கிடைக்கும் தண்டனையோ கொரோனா தொற்று. பிரச்சனைகள் தீரும் என்ற நம்பிக்கையே எதிர்ப்பு சக்தி. நம் கை ஓங்கிடுமென நாம் நம்பிட வேண்டும்.


இந்த ஊரடங்கு நம்மை பல வற்றை உணர வைத்து விட்டது.பல மாற்றங்களை உருவாக்கி உள்ளது. எத்தனை முறை வீழ்ந்தாலும் பிறந்து வர வேண்டும் என தாயம் உணர்த்திவிட்டது. அடுத்த வேலை உணவின் உன்னதத்தை ஆதாயம் உணர்த்திவிட்டது. அனைவரும் கொரோனா பல்கலை கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றதைப் போல் பலவற்றை உணர்த்துகிறார்கள். ஊரடங்கு கற்பித்ததை மறவாமல் வாழ்வில் உன்னதம் சேர்ப்போம். ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா அழியவில்லை, சிந்தித்து செயலாற்றுவோம்.


அன்புடன்,

 ஹரீஷ் முத்துக்கருப்பன்.

Comments

  1. வாழ்த்துக்கள்🙏🙏

    ReplyDelete
  2. Sooper da harish
    Nalla irunthuchu👌👌

    ReplyDelete
  3. உணர்ச்சிமிகு சொற்கள் 🙈😍💥

    ReplyDelete
  4. Replies
    1. நன்றிகள் பல 🙏☺🙏🙏

      Delete
  5. தமிழ் உன் எழுத்துக்கள் மூலம் புகுந்து விளையாடி விட்டது
    அமைச்சரே😍😍😍👌

    ReplyDelete
    Replies
    1. பெரிய வார்த்தைகள், மிக்க நன்றி மன்னா 🙏☺😜

      Delete
  6. மிக்க நன்றி 🙏☺

    ReplyDelete
  7. மிகவும் அருமையான பதிவு .
    தமிழை எழுத்துப்பிழையின்றி, உங்களது உச்சரிப்பிலும் சரி தமிழை நீங்கள் அருைமையாக கையான்டுள்ளீர். உங்களது நண்பனாக இருக்க நான் மிகவும் பெருைமை அடைகிேரேன்.
    உங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை திரு. வ. ஹரீஷ் முத்துக்கருப்பன் .
    இப்படிக்கு உங்கள் ஆருயிர் நண்பன்,
    திரு. கோபாலகிருஷ்ணன்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கனிவான சொற்களுக்கு மிக்க நன்றி தோழரே ☺😉❤🙏

      Delete
  8. Super da thambi... True words ... Loved it

    ReplyDelete
  9. Wow wow.. Tamil is always the best🔥

    ReplyDelete
  10. Wow wow.. Tamil is always the best🔥

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

IPL- "The Magic"

  “ Namaskaram Bengaluru” it’s toss time, Yes it’s April 18 2008 and we’re at Chinnaswamy . Any seats left, sorry man it’s houseful already, the whole world is ready to celebrate a new era of cricket.  8 teams, 60 matches, 56 days and one tournament “ Indian Premier League ” Some may ask, How a sporting event can create emotions? Yes it can IPL has some magic in it, so let me clue you in. Summer is the time where IPL and final exams come together and they both will remain together forever. When it comes to Exam Vs IPL, obviously IPL wins!! Watching matches during IPL and passing the exam next day is another level. School days were even more fun that time, having the annual exams on one   hand and the strict parent on the other hand, watching IPL is a big task. These moms won’t allow us to watch tv generally during exams, so here I need   to make a lie , saying that “ I’m gonna study at my friend home” and my friend   make the same lie and we both get into...

Dear Mani sir❤️

I wish my life was directed by Mani Ratnam Yes, the man who explored all forms of cinema in his own way of story telling. Nayakan to Ayitha ezuthu Mounaragam to Roja Alai payuthey to OK kanmani Thalapathy to Ravanan Bombay to Kannathil muthamittal Whatever may be the timeline, Mani stays in the trend .Yes He always admires us through his iconic frames and Captivative one lines those “Natpu na ennannu theriyuma, nanban na enanu theriyuma” and “Neenga nallavara illa kettavara…” are still making wonders in us. Mani is an enlightened filmmaker who is ahead of his time, really made some astonishing stuffs in his characters & films which made us to watch all day and still remains fresh.The most heart warming tale , Alaipayuthey a beautiful portrayal of love and after marriage life. I guess the opening shot of this film with Maddy on blues and Rahman’s “Endrendrum punnagai…” would the most beautiful opening shot till days.. And yes Alaipayuthe is an Iconic one of ManiRatnam.  #alaipay...